டிவிக்கும், தொகுப்பாளினி திவ்ய தர்ஷினிக்கும் (டிடி) இடையே மோதல் என்றும் இனிமேல் திவ்யதர்ஷினியை விஜய் டிவியில் பார்க்க முடியாது என்றும் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வம்புகள் பறந்துகொண்டிருக்கிறது. இது எந்த அளவு நிஜம் என்பதை அறிய திவ்யதர்ஷினியை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றோம். அவர் சிக்காததால் ‘வாட்ஸ் அப்’பில் விரட்டினோம். ‘வாட்ஸ் அப்’பில் நமக்கும் அவருக்கும் இடையேயான சம்பாஷனை இங்கே...
டிடி: சாரி. ஊர்ல இல்ல. என்ன விஷயம்?
நாம்: எப்போ உங்களோட பேச முடியும்?
டிடி: எதைப்பற்றி….? ஏன்னா.. சொல்றதுக்கு பெருசா எதுவும் இல்ல. விஷயம் இருந்தா நானே கூப்பிடுறேன்.
நாம்: நீங்க.. விஜய் டிவியை விட்டு விலகிட்டதா பேசுறாங்களே.. அதைப்பத்தி இரண்டு நிமிஷம் பேசணும்.
டிடி: ஹா…ஹா.. செம்ம்ம்ம்ம காமெடி. அது வெறும் வதந்தி. டேக் கேர்… பை
…… ம்ம்ம்ம்….. பார்க்கலாம்!