தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் ‘நானும் ரவுடிதான்’.
இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் விஜய் சேதுபதி முதன் முறையாக முன்னணி நடிகை ஒருவருடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். இவர்களுடன் ராதிகாவும் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறாராம்.
போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இதனை இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்திற்காக விஜய் சேதுபதி தனது தாடி மற்றும் மீசைக்கு விடை கொடுத்துள்ளார்.
இதுவரை லேசான தாடி மற்றும் மீசையுடன் வலம்வந்த விஜய் சேதுபதியை, இப்படத்தில் அது இல்லாமல் பார்ப்பதற்கு ரொம்பவும் இளமையாக தெரிகிறார். அதோடு, உடல் எடையையும் சற்று குறைத்து ஆளே மாறியிருக்கிறார். தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா சம்மந்தமான காட்சிகள் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டு வருகிறது.