ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க கட்டணம்(ரூ.20) விதித்த வங்கிகளை வழிக்கு கொண்டுவர என்ன செய்யலாம். "அனைத்து பகுதிகளிலும் வங்கிகளை திறக்க முடியாது என்பதால்தான் ஏடிஎம் மையங்களை வங்கிகள் திறந்தன. இப்போது நம்மிடமிருந்தே பணத்தை பறிக்கும் செயலிலும் வங்கிகள் இறங்கியுள்ளன. இதற்கு பதிலடியாக, நாம் வங்கிகளுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். வங்கி கணக்கு வைத்திருக்கும் நண்பர்கள் குரூப்பாக வங்கிக்கு சென்று, ஆளுக்கு ரூ.100 மட்டும் சலானை நிரப்பி எடுக்க வேண்டும்.
இப்படி நண்பர்கள் ஐந்து பேர், பத்து பேர் என தினமும்போய் பணத்தை எடுக்க வேண்டும். ஊருக்கு ஊர் இதேபோல செய்ய வேண்டும். அப்படி பணம் எடுப்பதில் எந்த தவறும் கிடையாது. ஏன் இப்படி குறைந்த பணத்தை எடுக்கிறீர்கள் என்று கேட்டால், இப்படி ஏ.டி.எம்மில் எடுத்து எங்களுக்கு பழக்கம் என்று கூறிவிடுங்கள். இவ்வாறு நாம் பணம் எடுக்க சென்று தொல்லை தந்தால், வங்கி ஊழியர்கள் அதை மேலிடத்துக்கு எடுத்துச் சொல்வார்கள். ஒரே மாதத்தில் புதிய நடைமுறையை வங்கிகள் திரும்ப பெறும்"