BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday 11 August 2014

உடலில் 5 இடத்தில் பச்சை குத்திய சுருதி ஹாசன்

நடிகைகள் பலர் பச்சைக் குத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். உடம்பில் விதவிதமாக பச்சை குத்தி வைத்துள்ளார்கள். திரிஷா மூன்று தடவை பச்சை குத்தி உள்ளார். முதலாவது ‘நெமோ’ என்ற கார்ட்டூன் பட மீனை பச்சை குத்தி இருந்தார்.

நயன்தாரா முதுகில் தேளையும் கையில் பிரபு என்ற பெயரையும் பச்சை குத்தி இருந்தார். நமீதா முதுகில் பச்சை குத்தி இருந்தார். ரீமாசென் வயிற்று பகுதியில் பறவையை பச்சை குத்தி இருந்தார். தமன்னா, காஜல் அகர்வால், அசின், பிரியாமணி, உள்ளிட்ட முன்னணி நடிகைகள் பலரும் தங்களுக்கு பிடித்தமானதை உடம்பில் பச்சை குத்தி வைத்துள்ளனர்.

சுருதி ஹாசன் ஏற்கனவே தனது பெயரை தமிழில் முதுகில் பச்சை குத்தி இருந்தார். அதன் பிறகு, கையில் ரோஜா மலரை பச்சை குத்தினார். காலிலும் பச்சை குத்தி இருந்தார். தற்போது ஐந்தாவது தடவையாக கையில் பச்சை குத்தி உள்ளார். முன்னாள் கதாநாயகிகள் குஷ்பு, சினேகா, சிம்ரன் போன்றோரும் பச்சை குத்தியுள்ளனர்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies