அண்மை செய்திகள்
முக்கிய செய்திகள்
சினிமா
உடல்நலம்
Tuesday, 19 November 2024
மதுரை: மேலூரில் வேதாந்தாவின் டங்ஸ்டன் சுரங்கம்? எச்சரிக்கும் அமைப்புகள்; மறுக்கும் மாவட்ட நிர்வாகம்
மேலூர் பகுதியில் வேதாந்தா நிறுவனம் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க உள்ளதாக எழுந்துள்ள தகவல் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள நிலையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் கனிம வளக் கொள்ளைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் மதுரை ஆட்சியர் சங்கீதாவிடம் அளித்த மனுவில், "மதுரை மாவட்டம் மேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிமம் எடுக்க மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. டங்ஸ்டன் கனிமம் எடுக்க வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் சிங்ஸ் எனும் நிறுவனத்திற்கு அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், 50 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. டங்ஸ்டன் கனிமம் எடுக்க அனுமதித்தால் முத்துவேல்பட்டி, கிடாரிப்பட்டி, எட்டிமங்கலம், அரிட்டாப்பட்டி, செட்டியார்பட்டி, நாயக்கர்பட்டி, வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படுவதோடு, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அரிட்டாப்பட்டி பல்லுயிர் சூழல் தலம் பாதிக்கப்படும். ஆகவே டங்ஸ்டன் கனிமம் எடுக்கத் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது" என்று மனுவில் தெரிவித்திருந்தனர்.
அப்போது மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் சங்கீதா, "மதுரையில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மாநில அரசிடமிருந்து எந்தவொரு அனுமதியும் பெறவில்லை. கனிமம் எடுக்கத் தமிழக அரசிடம் மத்திய அரசு தடையில்லா சான்று பெற வேண்டும். மதுரையில் டங்ஸ்டன் கனிமம் எடுக்கப்பட உள்ளதாக அவ்வப்போது புரளி பரவுகிறது. தங்கள் மனுவை அரசுக்கு அனுப்பி வைக்கிறேன்" என்று உறுதியளித்துள்ளார்.
இந்த தகவல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரிட்டாப்பட்டி பல்லுயிர் பாரம்பர்ய தலம் அழகர்மலைக்கருகே 2015.51 எக்டேரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கிறது வேதாந்தா நிறுவனம். சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957-ன் கீழ் நடத்தப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களின் 4-வது ஏலத்தில் மதுரை மாவட்டம் மேலுர் தாலுகாவில் உள்ள டங்ஸ்டன் கனிமத் தொகுதியை இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்ததாக ஒன்றிய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சூழல் சீர்கேடுகளுக்குக் காரணமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நடத்தி வந்த வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். தற்போது ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக வழங்கப்பட்டுள்ள மதுரை மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட 2015.51 எக்டேர் பகுதியில்தான் தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பர்ய தலமாக (Biodiversity Heritage Site) அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றான அழகர் மலையானது சுரங்கத் தொகுதியின் எல்லையிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பெருமாள் மலையானது இச்சுரங்கத் தொகுதியை ஒட்டியே அமைந்துள்ளது. பெருங்கற்காலத்தைச் சேர்ந்த அமைவுகள், 2200 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழி கல்வெட்டுகள், சமணர் படுகைகள், சங்ககால பாண்டியர்களால் கொடையளிக்கப்பட்ட கற்படுக்கைகள், குடைவரைக்கோயில்கள் எனத் தமிழ்நாட்டு வரலாற்றின் தனித்துவமான அடையாளங்களைத் தாங்கி நிற்கும் இடம் .
குளங்கள், நீர்ச்சுனைகள், ஊற்றுகள், தடுப்பணைகள், பறவைகள், விலங்குகள் எனத் தொல்தமிழர் வரலாற்று மற்றும் உயிர்ப்பன்மையமிக்க பகுதியாக அரிட்டாபட்டி விளங்குகிறது. இங்கு 72 ஏரிகள், 200 இயற்கைச் சுனைகள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளன. இங்குள்ள ஆனைகொண்டான் ஏரி, பதினாறாம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆட்சியில் கட்டப்பட்டது. மேலும் இப்பகுதியில் வெள்ளை வல்லூறு, செம்மார்பு வல்லூறு, ராசாளிக் கழுகு உள்ளிட்ட 250 பறவைகளும், அழுங்கு, மலைப்பாம்பு, தேவாங்கு போன்ற உயிரினங்களும் வாழ்கின்றன. இப்படி பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியை டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான இடமாகப் பட்டியலிட்டு, அதை ஏலப்பட்டியலில் சேர்த்ததே தவறு. கீழடி அகழாய்வுக்கு அனுமதி கேட்டபோது தராத ஒன்றிய அரசு அரிட்டாபட்டியை அழிக்க அனுமதி தருகிறது .
தமிழர் பண்பாட்டுச் சுவடுகளை அழித்தொழிக்கும் வகையில் அரிட்டாபட்டியை உள்ளடக்கிய 2015.15 எக்டர் பரப்பிலான பகுதியை வேதாந்தாவின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வழங்கியுள்ளது. ஒன்றிய அரசு உடனடியாக இந்த ஏல நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்கான சுரங்க அனுமதி, சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவற்றை வழங்கக் கூடாதென வலியுறுத்துகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
Career: பொறியியல் படித்தவர்களுக்கு நெய்வேலி NLC-ல் இன்ஜினியர் பணிகள்; எப்படி விண்ணப்பிக்கலாம்?
கடலூர் மாவட்டம் நெய்வேலியிலுள்ள என்.எல்.சி இந்தியா லிமிடெட் (NLC India Limited ) பொதுத்துறை நிறுவனம் Executive Engineer பணிகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்த விவரங்கள்:
பணியின் பெயர் : Executive Engineer.
i) Mechanical - 89,
ii) Electrical 41,
iii) Civil – 30.
மொத்த காலியிடங்கள் : 160
மேற்கண்ட பதவிகளுக்கான கிரேடு, காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இட ஒதுக்கீடு, கல்வித் தகுதி மற்றும் அனுபவம் ஆகிய விவரங்கள் கீழே அட்டவணையில் உள்ளது.
கல்வித்தகுதி:
விண்ணப்பிக்கும் பணிகளுக்குச் சம்மந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவுகள் அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் B.E./B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், 5 ஆண்டுகள் பணியில் அனுபவம் வேண்டும்.
வயது வரம்பு:
36 வயதுக்குள் இருக்கவேண்டும்.
SC/ST பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.
01.01.2024 தேதியின்படி கணக்கிடப்படும்.
சம்பள விகிதம்: ரூ.70,000 - ரூ.2,00,000.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு பற்றிய விவரங்கள் மின்னஞ்சல் மூலமாகச் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்புவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
UR/EWS/OBC பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.800.
SC/ST/PWD பிரிவினர்களுக்கு மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.300.
விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.nlcindia.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசிநாள்: 17.12.2024
மேலும், முழு விவரங்களுக்கு Advt.No.18/2024 இந்த லிங்கை கிளிக் செய்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுதும் படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
ஒன் பை டூ: “பா.ஜ.க அல்லாத கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைப்போம்” என்ற எடப்பாடி பழனிசாமியின் கருத்து!
டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க
“உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி. ‘பாசிச பா.ஜ.க தொடர்ந்து மக்கள் விரோதச் செயல்களைச் செய்துவருகிறது. எனவே, இனி அந்தக் கட்சியுடன் கூட்டணி வேண்டாம்’ என்று கட்சியில் ஒருமனதாக முடிவெடுத்து ஏற்கெனவே அறிவித்துவிட்டோம். பா.ஜ.க கூட்டணி இல்லாமல், ஒரு தேர்தலையும் சந்தித்துவிட்டோம். இனியும் பா.ஜ.க-வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர்களுடன் ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது என்பதை மிக அழுத்தமாக மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இருந்தபோதிலும், தி.மு.க போன்ற விஷக்கிருமிகள் இல்லாத ஒன்றை இருப்பதுபோல ஒரு மாய பிம்பத்தைக் கட்டமைக்கப் பார்க்கின்றன. `அ.தி.மு.க கூட்டணிக்கு வருமா...’ என்று பா.ஜ.க வேண்டுமானால் காத்திருக்கலாம். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க அல்லாத, தீய சக்தி தி.மு.க-வை வீழ்த்த நினைக்கும் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணிவைத்து அ.தி.மு.க தேர்தலை எதிர்கொள்ளும். 2026-ல் ஆட்சியமைக்கப்போவது அ.தி.மு.க-தான்!”
நாராயணன் திருப்பதி,மா நில துணைத் தலைவர், பா.ஜ.க
“பா.ஜ.க தலைமை இதுவரை அ.தி.மு.க-வுடன் கூட்டணி வேண்டும், வேண்டாம் என்று எதையும் சொல்லவில்லை. கூட்டணிக்காக பா.ஜ.க இதுவரை எந்தக் கட்சியிடமும் சென்று நிற்கவும் இல்லை. தற்போதைய சூழலில், தமிழகத்தில் எந்தத் தேர்தலும் வரப்போவதும் இல்லை. எனவே, அ.தி.மு.க-வினர் பேசுவதற்கெல்லாம் பதில் சொல்லி எங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. தேர்தலுக்கு நீண்ட நாள்கள் இருக்கும்போது, இப்போதே கூட்டணி குறித்துப் பேசுவது சரியாகாது. அதேபோல பா.ஜ.க., எந்தக் கட்சியுடன் கூட்டணி இருக்கிறது, இல்லை என்பதையெல்லாம் எங்களது டெல்லி தலைமைதான் முடிவுசெய்யும். தலைமை சொல்லும் கட்சியுடன் தமிழக பா.ஜ.க இணைந்து 2026 சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்து, மாபெரும் வெற்றிபெறும். அதற்கான முன்னேற்பாடாக மாநிலம் முழுவதும் கட்சியில் அமைப்புரீதியான தேர்தல்களை நடத்தி தமிழக பா.ஜ.க-வை வலுப்படுத்திவருகிறோம். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்!”

Monday, 18 November 2024
சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு விவகாரம்... லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அமெரிக்காவில் கைது..!
அன்மோல் பிஷ்னோய்
இந்தியாவில் பஞ்சாப் உட்பட வட மாநிலங்களில் மிரட்டி பணம் பறித்தல், கூலிக்கொலை, கொலை மிரட்டல் போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகிறது லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க். இக்கும்பலின் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
துப்பாக்கிச்சூடு
ஆனால் அவனது சகோதரன் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்கா மற்றும் கனடாவில் பதுங்கி இருந்து கொண்டு மற்றொரு கூட்டாளியான கோல்டி பிரருடன் சேர்ந்து இந்தியாவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறான். இக்கூட்டத்தில் 700 பேர் இருக்கின்றனர். சமீபத்தில் நடிகர் சல்மான் கானின் நெருங்கிய நண்பர் பாபா சித்திக்கை இக்கும்பல் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம், லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் சல்மான் கான் வீட்டின் மீதும் துப்பாக்கியால் சுட்டனர். இத்துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் அன்மோல் பிஷ்னோயிக்கு தொடர்பு கொண்டு இருப்பது மும்பை போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ரெட் கார்னர் நோட்டீஸ்
இதையடுத்து அவனை தேடி கண்டுபிடிக்க மும்பை போலீஸார் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் கைது வாரண்ட் பெற்றனர். அதன் அடிப்படையில் அவனை கைது செய்ய மும்பை போலீஸாரின் வேண்டுகோளை ஏற்று மத்திய விசாரணை ஏஜென்சி சர்வதேச போலீஸார் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டது. அதோடு அன்மோல் குறித்த தகவல்களை கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் கொடுக்கப்படும் என்றும் மத்திய விசாரணை ஏஜென்சி தெரிவித்தது.
அமெரிக்காவில் கைது..
இதையடுத்து சமீபத்தில் அமெரிக்கா தங்களது நாட்டில் அன்மோல் பிஷ்னோய் இருப்பதை உறுதி செய்தது. எனவே அவனை தங்களது நாட்டிற்கு நாடு கடத்தும்படி மத்திய அரசு அமெரிக்காவிடம் கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் அன்மோல் பிஷ்னோயை அமெரிக்க போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். அவனை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கைது செய்துள்ளனர்.
அன்மோல் மீது கனடாவில் ஹர்தீப் சிங் கொலை வழக்கு நிலுவையில் இருக்கிறது. எனவே அமெரிக்கா முதலில் அன்மோலை கனடாவிடம் ஒப்படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவிடம் ஒப்படைக்கப்படும் பட்சத்தில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவது சிரமம் ஆகிவிடும். இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இப்போது உறவு சரியில்லாமல் இருக்கிறது.
லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் கடந்த 2022ம் ஆண்டு பஞ்சாப் பாடகர் சீதுமூஸ்வாலாவை கொலை செய்த பிறகுதான் அக்கூட்டத்தின் செயல்பாடுகள் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்தது. தற்போது நடிகர் சல்மான் கான் ராஜஸ்தானில் அபூர்வ வகை மான்களை வேட்டையாடியதற்காக அவருக்கு பிஷ்னோய் கேங்க் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கிறது.

Caste Census: `UPA அரசு செயல்படுத்தாதது தவறு' - சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ராகுல்
காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் தொடர்ச்சியாக, மத்திய அரசை வலியுறுத்தி வரும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று சாதிவாரி கணக்கெடுப்பு (Caste Census). நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் இதனை வாக்குறுதியாகவே அறிவித்தது. தற்போது, நடந்துகொண்டிருக்கும் ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலிலும், ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் எனக் காங்கிரஸ் உறுதியளித்திருக்கிறது.
இந்த நிலையில், யு.பி.ஏ ஆட்சியின்போது அதைச் செயல்படுத்தாதது தவறென்று நினைப்பதாகவும், காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றால் அதைச் செயல்படுத்துவோம் எனவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜார்க்கண்டில் தெரிவித்திருக்கிறார்.
மாநில தலைநகர் ராஞ்சியில் பேசுகையில் இதனைத் தெரிவித்த ராகுல் காந்தி, ``ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் (UPA), காங்கிரஸும் சாதிவாரி யோசனையை முன்வைத்தது. அப்போதே அதை நடைமுறைப்படுத்தாதது தவறு என்று கருதுகிறேன். இரண்டு தென் மாநிலங்களில் காங்கிரஸ், பல தரப்பினரைச் சந்தித்து பொது விவாதம் மூலம் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கேள்விகளுக்குத் தயாராகி வருகிறது. காங்கிரஸ் இதில் மிகத் தெளிவான பார்வை கொண்டிருக்கிறது.
துல்லியமான தரவு கிடைத்ததும், அனைத்து பிரிவினருக்கும் நீதியை உறுதிப்படுத்தும் கொள்கைகளை நாம் உருவாக்க முடியும். லோக்சபாவில் நான் உறுதியளித்ததைப் போல, ஜார்க்கண்டில் நாங்கள் செய்வோம். சாதிவாரி கணக்கெடுப்பை நாங்கள் செயல்படுத்தும்போது, இது இந்த நாட்டின் மாற்றம் மற்றும் வளர்ச்சியில் ஒரு பெரிய படியாக அது இருக்கும் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன். மேலும், பா.ஜ.க இதைச் செயல்படுத்த விரும்பினாலும், எப்படிச் செய்வதென்று அவர்களுக்குத் தெரியாது." என்று கூறினார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...